Enable Javscript for better performance
அனைத்து கிராமங்களிலும்  ஜூன் மாதத்துக்குள் விளையாட்டுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து கிராமங்களிலும்  ஜூன் மாதத்துக்குள் விளையாட்டுப் போட்டிகள்

    By DIN  |   Published on : 18th May 2018 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் ஜூன் மாதத்துக்குள் விளையாட்டுப் போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
    ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
    கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் ஜூன் மாதத்துக்குள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், தனி நபர் போட்டிகள் (இருபாலருக்கும்) தடகளம், 100 மீட்டர் ஓட்டம்,  200 மீட்டர் ஓட்டம்,  400 மீட்டர் ஓட்டம்,  நீளம் தாண்டுதல்,  குண்டு எறிதல்,  வட்டு எறிதல் ஆகியவை நடத்த வேண்டும். 
    குழுப் போட்டிகளான கைப்பந்து, கபடி, கால்பந்து போன்ற போட்டிகளும், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் இரு போட்டிகளும் நடத்த வேண்டும். முதல் மூன்று இடங்கள் பெறுபவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட வேண்டும்.
    இச்சான்றிதழில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்,  கிராமச் சிறப்பு அலுவலர் ஆகியோர் கையொப்பமிட வேண்டும். கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், கிராமத்தில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய போட்டிகளில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். போட்டிகள் நடைபெறும்போது விதிமுறைகள் குறித்து முன்னரே அறிவிக்க வேண்டும். 
    முழுமையாக விதிமுறைகளைக் கடைப்பிடித்து போட்டிகளை நடத்த வேண்டும் என்றார் ஆட்சியர்.
    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி. மந்திராலசம், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai