Enable Javscript for better performance
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இலவச வெல்டிங் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இலவச வெல்டிங் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச வெல்டிங் பயிற்சி பெற மே 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து மைய இயக்குநர் பி. ராஜசேகரன் மேலும் தெரிவித்திருப்பது:
    இம்மையத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு வெல்டிங் பயிற்சி 30 நாட்களுக்கு இலவசமாக நடைபெற உள்ளது. பயிற்சியின்போது மதிய உணவு, தேநீர், தேவையான பயிற்சி பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். 
    பயிற்சிக்கு பின் வங்கிக்கடன் பெற வழிகாட்டப்படும். பயிற்சி பெற விரும்புபவர்கள் மே 23-ம் தேதிக்குள் இயக்குநர், எண்-4, பக்கிரிசாமிபிள்ளை தெரு, ஈஸ்வரிநகர், மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613 004 என்ற முகவரியில் விண்ணப்பத்தை அளிக்கலாம். இப்பயிற்சியில் சேர தஞ்சாவூர் மாவட்ட கிராமப்புறத்தைச் சேர்ந்த குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 40 வயதுக்குட்பட்ட  ஆண்கள் கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் மையத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04362 242377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai