Enable Javscript for better performance
உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் வட்டம்,  பசுபதிகோவிலுக்கு வந்த  உழவனின் உரிமை மீட்பு சைக்கிள்  பேரணிக்கு வியாழக்கிழமை பிற்பகல் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    பாரதிய ஜனதா கட்சி சார்பில்  உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு. எம். முருகானந்தம் தலைமையில் புதன்கிழமை கல்லணையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    இந்நிலையில்,  இரண்டாவது நாளான வியாழக்கிழமை பிற்பகல் இந்தப் பேரணி திருக்காட்டுப்பள்ளி,  கண்டியூர் வழியாக  பாபநாசம் சட்டமன்ற தொகுதி மேற்கு எல்லையான பசுபதிகோவில் பகுதிக்கு வந்தது.
    சைக்கிள் பேரணிக்கு மாநில விவசாய அணி துணைத் தலைவர்அஜய்பிரபாகர், மாவட்ட பொதுச் செயலாளர் வாசுதேவன், மாவட்ட துணை தலைவர்கள் சாந்தாராமன், கே.எஸ்.தேசிகன், நகரத் தலைவர் ஹரிராஜன் உள்ளிட்டோர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    பின்னர் சைக்கிள் பேரணி,  சக்கராப்பள்ளி, வழுத்தூர், பண்டாரவடை, ராஜகிரி, பாபநாசம் வழியாக கபிஸ்தலம் சென்றடைந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai