Enable Javscript for better performance
காவிரியில் உரிமை நிலைநாட்டப்படும்நம்பிக்கை இருக்கிறது: வே. துரைமாணிக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரியில் உரிமை நிலைநாட்டப்படும் நம்பிக்கை இருக்கிறது: வே. துரைமாணிக்கம் 

    By DIN  |   Published on : 18th May 2018 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரியில் உரி மை நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலப் பொதுச் செயலர் வே. துரைமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
    உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 14-ம் தேதி மத்திய அரசுத் தாக்கல் செய்தது. அதில், தமிழ்நாட்டுக்கு எதிரானதாகவும், கர்நாடகத்துக்குச் சாதகமாகவும் பல பிரிவுகள் இடம்பெற்றிருந்தன.
    ஆணையம், அல்லது குழு அல்லது வாரியம் இதில் எதை அமைப்பது என உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசுக் கேட்டிருந்தது. தமிழ்நாட்டின் கோரிக்கையான மேலாண்மை வாரியம் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு கர்நாடகத்திடம் கருத்துக் கேட்டனர். கர்நாடகம் ஒத்துக் கொண்டுள்ளது. அந்த வாரியம் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் செயல்பட வேண்டும் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. நதி நீர் பகிர்வு பிரச்னையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை மேலாண்மை வாரியத்துக்கு அளிக்க வேண்டும். 
    நடுவர் மன்றம் அறிவித்தபடி தமிழ்நாட்டுக்கு மாத வாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்குவதற்கு மேலாண்மை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பற்றாக்குறை காலங்களில் எப்படித் தண்ணீரை பகிர்ந்து கொள்வது என்பது பற்றியும் நடுவர் மன்றம் கூறியுள்ளது. இதை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai