Enable Javscript for better performance
காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக முதல்வரை சந்திப்பேன்: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக முதல்வரை சந்திப்பேன்: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

    By DIN  |   Published on : 18th May 2018 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக முதல்வரை ஒரு மாதத்துக்குள் சந்தித்து பேச உள்ளேன் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
    தஞ்சாவூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
    விவசாயிகளின் பிரச்னையை தீர்க்கக்கூடிய முதல் முயற்சியாக கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 
    150 ஆண்டுகள் பழைமையான சிக்கல் நிறைந்த காவிரி பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு உச்ச நீதிமன்றமும் துணையாக இருக்கிறது. கர்நாடக முதல்வரை ஒரு மாதத்துக்குள் சந்தித்து காவிரி பிரச்னை,   இரு மாநில உறவு,   கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் பிரச்னை ஆகியவை குறித்து பேச உள்ளேன். காவிரியில் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
    ஹைட்ரோ கார்பன் திட்டம் 29 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதில், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே இத்திட்டத்தை வேண்டாம் எனக் கூறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.  இதுகுறித்த லாப,  நஷ்டங்களை தெரிந்து கொண்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும். தமிழகம் வேண்டாம் எனக் கூறிய நிலையில் இத்திட்டம் கைவிடப்பட்டது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
     பொன். ராதாகிருஷ்ணன் - வைத்திலிங்கம் சந்திப்பு: தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் பொன். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தங்கி இருந்தார். அதே மாளிகையில் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர். வைத்திலிங்கமும் தங்கியிருந்தார். இதனிடையே, பொன். ராதாகிருஷ்ணனை அவரது அறைக்கு வைத்திலிங்கம் சென்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்தது.
    இதுகுறித்து வெளியே வந்த வைத்திலிங்கத்திடம் கேட்டபோது, மத்திய அமைச்சர் தஞ்சாவூருக்கு வந்துள்ளார். அவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசினேன் என்றார்.
    இதேபோல, பொன். ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில்,  நட்பு ரீதியாக சந்தித்து பேசினேன் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai