Enable Javscript for better performance
கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள்மே 21 முதல் விடுப்பு எடுத்து போராட முடிவு- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள் மே 21 முதல் விடுப்பு எடுத்து போராட முடிவு

    By DIN  |   Published on : 18th May 2018 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள் மே 21-ம் தேதி முதல் விடுப்பு எடுத்துப் போராட முடிவு செய்துள்ளனர்.
    இதுகுறித்து ஆட்சியரிடம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் அளித்த மனு:
    தமிழகம் முழுவதும் 4,500 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்குரிய தேர்தல் 4 கட்டமாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் முறைகேடு புகார் காரணமாகத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் தடை விதித்து, வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பொறுப்பில் இருந்து வந்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் மே 8-ம் தேதியுடன் முடிவடைந்தது.
    இந்நிலையில், சங்கங்களின் வரவு - செலவுகள் நிர்வாகம் இல்லாத நிலையில் முற்றிலும் முடங்கிப்போய் விட்டது. இந்த நிலை குறித்து அரசுக்குத் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சங்க நிர்வாகம் தொய்வின்றி நடைபெறும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள் 1,000 பேர் மே 21-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
    தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மண்டலச் செயலரும், தஞ்சாவூர் மாவட்டச் செயலருமான மணிவண்ணன், மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, பொருளாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இந்த மனுவை அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai