Enable Javscript for better performance
தஞ்சாவூர், பூண்டி பகுதிகளில் மே 19 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, மருத்துவக் கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காவேரி நகர், எலீசா நகர், நூற்பாலை, வங்கி ஊழியர் காலனி, ஈ.பி. காலனி, மாதாகோட்டை, வல்லம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை ரோலர் பிளவர் மில், வஸ்தா சாவடி, பிள்ளையார்பட்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி, கள்ளப்பெரம்பூர், திருமலைசமுத்திரம், சக்கரசாமந்தம், களிமேடு, மானோஜிப்பட்டி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    இதேபோல,  பூண்டி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 
    எனவே,  பூண்டி,  சாலியமங்கலம்,  திருபுவனம்,  மலையர்நத்தம்,  குடிகாடு,  செண்பகபுரம்,  பள்ளியூர்,  களஞ்சேரி,  இரும்புத்தலை,  ரெங்கநாதபுரம்,  சூழியக்கோட்டை,  கம்பர்நத்தம், அருந்தவபுரம், காட்டூர், வாளமர்கோட்டை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    திருப்பனந்தாள் பகுதியில்...
    திருப்பனந்தாள் துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 19) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்,  திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சிக்கல்நாயக்கன்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai