Enable Javscript for better performance
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி:கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி சாம்பியன்

    By DIN  |   Published on : 18th May 2018 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மேல்நிலை பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
    கேரள மாநிலம்,  திருவனந்தபுரத்தில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் மே 11 முதல் 13 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றது. இப்போட்டிகளில் கேரளம்,  ஆந்திரம்,  கர்நாடகம்,  தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 20 மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    6 - 8,  8 - 10,  10 - 12,  12 - 14,  15 வயதிற்கும் மேற்பட்ட என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
    இதில் தமிழகத்தின் சார்பில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியிலிருந்து 16 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் மாணவிகள் அகஸ்தி,  யாழினி,  யோகலெட்சுமி ஆகியோர் இரு பிரிவுகளில் 2 தங்க பதக்கமும்,  மாணவர்கள் சக்திநாத சிவா தங்க பதக்கமும், ஞானேஷ் 2 வெள்ளி பதக்கமும்,  டோம்னிக் சேவியர் ஒரு வெள்ளி பதக்கமும், அரவிந்தன், சாணக்கியா, சபரிநாத சிவா,  ஹரிகிருஷ்ணன்,  நித்தீஸ்வரன்,  சித்தார்த்தன், ரிஸ்வந்த்குமார்,  கமலேஷ்,  நிவாஸ்பிரியன்,  டோம்னிக் சேவியர்,  அஸ்மிதா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர். இப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்ற மாநிலங்களைவிட அதிகளவில் பரிசுகளை பெற்றதால் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர்கள் எஸ்.ஏ. கார்த்திகேயன்,  எம். பூர்ணிமா, முதல்வர் டி. அம்பிகாபதி, உடற்கல்வி ஆசிரியர்கள் கந்தன், சதீஷ் ஆகியோர் பாராட்டினர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai