Enable Javscript for better performance
நினைவேந்தல் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வழக்குரைஞர் மு. கரிகாலன், மகளிர் செயற்பாட்டாளர் த. சரசுவதி படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
    பேரியக்கத்தின் மாவட்டச் செயலர் நா. வைகறை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இருவரது படங்களையும் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் திறந்து வைத்தார்.
    மூத்த வழக்குரைஞர் தஞ்சை அ. ராமமூர்த்தி, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த. மணிமொழியன், சமவெளி விவசாயிகள் இயக்கத் தலைவர் சு. பழனிராசன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai