Enable Javscript for better performance
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில்தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் உள்ள பிரதான மின்சார போர்டில் மின் கசிவு காரணமாக வியாழக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது.  
    இதையடுத்து, உடனடியாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. பிரசவ வார்டில் இருந்த பெண்கள் பாதுகாப்பாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பிரசவ வார்டில் இருந்த தீயணைப்புக் கருவியைக் கொண்டும், மணலை வீசியும் தீயை அணைத்தனர்.  
    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினரும் சென்று தீ பரவாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கப்பட்டது. தீ விபத்து நிகழ்ந்த வார்டை தலைமை மருத்துவர் ராணி அசோகன், மருத்துவர் கி.நியூட்டன் ஆகியோர்  பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai