Enable Javscript for better performance
பாபநாசத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி

    By DIN  |   Published on : 18th May 2018 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாபநாசம் தனியார் கல்லூரி வளாகத்தில் பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு புதன்கிழமை பயிற்சி முகாம்  நடைபெற்றது.
    கும்பகோணம் சார் ஆட்சியர் மா. பிரதீப்குமார் உத்தரவின் பேரில், பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் தேர்தல் துணை வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று செல்போன் மூலம் தேர்தல் நடத்தும் விதிமுறைகள் குறித்து தகவல் அனுப்புதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல்,திருத்தம் செய்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தனர். 
    இந்த பயிற்சி முகாமில் ஆசிரியர்கள், வருவாய் அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட 250 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai