Enable Javscript for better performance
மணல் கடத்தலை தடுக்க ஆற்றுக்கு செல்லும் வழிகளில் பள்ளம் தோண்டி தடை- Dinamani

சுடச்சுட

    

    மணல் கடத்தலை தடுக்க ஆற்றுக்கு செல்லும் வழிகளில் பள்ளம் தோண்டி தடை

    By DIN  |   Published on : 18th May 2018 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாபநாசம் வட்டம்,  அய்யம்பேட்டை வருவாய் சரக பகுதிகளில் வியாழக்கிழமை வருவாய்த் துறையினர் ஆற்றிலிருந்து மணல் கடத்தலை தடுக்கும் வகையில் ஆற்றுக்கு செல்லும் வழிகளில் பள்ளங்கள் தோண்டி தடை ஏற்படுத்தியுள்ளனர்.
    அய்யம்பேட்டை வருவாய் சரக பகுதிகளில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் பாபநாசம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் மேற்பார்வையில்,  வருவாய் அதிகாரி அசோக்குமார், கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் மற்றும் வருவாய்த் துறையினர் பசுபதிகோவில் மணல்மேட்டு தெரு, நெசவாளர் காலனி தெரு, இலுப்பக்கோரை உள்ளிட்ட பகுதிகளில் குடமுருட்டி 
    ஆற்றுக்கு செல்லும் வழிகளில் இயந்திரங்களைக் கொண்டு பெரிய பள்ளங்களை தோண்டி வாகனங்கள் செல்ல முடியாதபடி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai