Enable Javscript for better performance
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இந்திய வங்கி சங்கம் 2 சதவீதம் மட்டுமே ஊதியம் உயர்த்தி இருப்பது, வங்கி ஊழியர்கள் கோரிக்கையை ஏற்காத இந்திய வங்கிச் சங்கத்தைக் கண்டித்தும், வங்கி ஊழியர் நலனை அலட்சியப்படுத்தும் மத்திய அரசை கண்டிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
    அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு மாவட்டச் செயலர் கே. அன்பழகன் தலைமை வகித்தார்.  தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு மாவட்டச் செயலர் தமிழ்ச்செல்வன், வங்கி அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai