மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கமளிக்கவே நலத்திட்டங்கள்: அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு

மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கமளிக்கவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்றார் வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கமளிக்கவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்றார் வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியது:
மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கு வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் பிறரை நம்பியிருக்காமல் சுயமாகத் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஊக்கமளிக்கவே தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 
மாற்றுத்திறனாளிகளுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசுப் பணியில் தனி இட ஒதுக்கீடு வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மூலம் பயன் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார் அமைச்சர்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரத்து 606 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினர்கள் கு. பரசுராமன் (தஞ்சாவூர்), ஆர்.கே. பாரதிமோகன் (மயிலாடுதுறை), மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com