கும்பகோணத்தில்  13 புதிய பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைப்பு

கும்பகோணம் பணிமனைக்கு வழங்கப்பட்ட 13 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் இரா.துரைக்கண்ணு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் பணிமனைக்கு வழங்கப்பட்ட 13 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் இரா.துரைக்கண்ணு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூர் கிளைக்கு 5 பேருந்துகள், பட்டுக்கோட்டைக்கு 3, கும்பகோணம் புறநகருக்கு 4, நகரக் கிளைக்கு ஒரு பேருந்து வழங்கப்பட்டது. இப்பேருந்துகள் காஞ்சிபுரம், வேலூர், மதுரை, ராமேசுவரம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளை மாநில வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு கொடியசைத்துத் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியது: கும்பகோணம் கோட்டத்துக்கு 99 பேருந்துகள், கும்பகோணம் பணிமனைக்கு 13 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 13 பேருந்துகளின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. தனியார் பேருந்துகளுக்கு நிகராக இப்பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னிப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பேருந்துகளில் கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை.மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. மேலும் கொள்முதலுக்கு தேவையான சாக்குகள் போதியளவு கையிருப்பில் உள்ளது. கடைமடை பகுதி வரை தற்போது தடையின்றி தண்ணீர் செல்கிறது என்றார்.
நிகழ்ச்சியில், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பி.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com