நாளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பான நான்காம் கட்ட சிறப்பு முகாம்  ஞாயிற்றுக்கிழமை (அக்.14) நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பான நான்காம் கட்ட சிறப்பு முகாம்  ஞாயிற்றுக்கிழமை (அக்.14) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் செப்.1ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் செப். 9, 23, அக். 7 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 24,651 படிவங்கள், பெயர் நீக்கத்துக்கு 5,150, திருத்தம் செய்ய 2,113, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 1,520 என 38,046 படிவங்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.    
அதேபோல, மாவட்டத்தில் உள்ள 2,287 வாக்குச் சாவடி மையங்களில் நான்காம் கட்ட சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.14) நடைபெறவுள்ளது. இம்முகாமில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் தொடர்பாக உரிய விண்ணப்பப் படிவங்களை ஆதார ஆவணங்களுடன் நிலை அலுவலர்களிடம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை நேரில் அளிக்கலாம்.
மேலும், அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் நகல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இதனைப் பார்வையிட்டு, தங்களது பெயர் பிழையின்றி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை வாக்காளர் தெரிந்து கொள்ளலாம். மாவட்டத்தில் செப்.1 முதல் அக்.31ஆம் தேதி வரை பெறப்படும் படிவங்கள் மீது உரிய விசாரணை செய்து, தகுதியின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2019 ஜன.4ஆம் தேதி வெளியிடப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com