ரூ.10 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட   கண்ணாடி நாரிழைத் தேரை பெரியகோயிலுக்கு வழங்கிய பக்தர்

தஞ்சாவூர் பெரியகோயிலில் சதய விழாவில் திருமுறை திருவீதி உலாவுக்காக ரூ.10 லட்சம் மதிப்பில் கண்ணாடி

தஞ்சாவூர் பெரியகோயிலில் சதய விழாவில் திருமுறை திருவீதி உலாவுக்காக ரூ.10 லட்சம் மதிப்பில் கண்ணாடி நாரிழையால் தயாரிக்கப்பட்ட தேரை பக்தர் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
ஆயிரம் ஆண்டுக்கு முன்பு பெரியகோயிலைக் கட்டி தமிழகத்துக்கு பெருமை சேர்த்த ராசராச சோழனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் இரண்டாம் நாளில் ராஜ வீதிகளில் நடைபெறும் திருமுறை வீதி உலாவில் ஓதுவார்கள் பெரியகோயில் கோபுரம், நந்தி மண்டபம் வடிவிலான மாதிரி தேரை டிராக்டரில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்வது வழக்கம். இத்தேரானது திருவிழாவின்போது தற்காலிகமாக அட்டையில் தயாரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு வந்தது.
இதற்கு நிரந்தரமாகக் கண்ணாடி நாரிழையால் தயாரிக்கப்பட்ட தேரை வல்லத்தைச் சேர்ந்த பக்தர் ராமலிங்கம் வெள்ளிக்கிழமை கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார். பெரியகோயில் கோபுரம், நந்தி மண்டபத்துடன் கூடிய வடிவில் இத்தேர் உள்ளது. 
இதுகுறித்து ராமலிங்கம் கூறியது: இக்கோயிலில் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற சதய விழாவில் திருமுறை வீதி உலாவின்போது அட்டையால் செய்யப்பட்ட தேரைக் கொண்டு செல்வதைப் பார்த்தேன். எனவே, நிரந்தரமாக தேரைச் செய்து வழங்குவது என முடிவு செய்தேன். சென்னையில் கண்ணாடி நாரிழையால் 12 அடி உயரம், பதினெட்டரை அடி நீளம், 7 அடி அகலத்தில் தேர் தயாரிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என்றார் அவர். 
ராமலிங்கம் சென்னையில் திரைத் துறையில் கலை இயக்குநராக உள்ளார். இவருடன் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ராமசாமி, செயலர் பி. கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com