சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் உயிர் பெறுமா?

 சேது சமுத்திரத் திட்டத்தை சென்னையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிவித்து சனிக்கிழமையுடன் (செப்.15) 20 ஆண்டுகள் கடந்து விட்டன.


சேது சமுத்திரத் திட்டத்தை சென்னையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிவித்து சனிக்கிழமையுடன் (செப்.15) 20 ஆண்டுகள் கடந்து விட்டன.
சேது சமுத்திரத் திட்டக் கால்வாய் பாதை தொடர்பான சர்ச்சை காரணமாக உச்ச நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்து திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மாற்றுப் பாதையில்...: சேது சமுத்திரம் கப்பல் கால்வாய் திட்டத்தின் சாதகத்தை கருத்தில் கொண்டு அதைச் செயல்படுத்த மத்திய அரசு நோக்கம் கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் வழித்தடம் 6-இன் சமூக- பொருளாதார பாதகங்களைக் கருத்தில் கொண்டு அந்த வழித்தடத்தில் திட்டத்தைச் செயல்படுத்த அரசு விரும்பவில்லை. நாட்டின் நலன் கருதி ஆதாம் பாலம் அல்லது ராமர் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாமலும், சேதப்படுத்தாமலும் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சேது சமுத்திர கால்வாய்த் திட்ட வழித்தடத்துக்குப் பதில் மாற்று வழியில் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு கருதுகிறது'' என மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குநர் அனந்த் கிஷோர் சரண் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உச்ச நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com