நாட்டின் நலன் கருதி மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ்

 நாட்டின் நலன் கருதி பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.
நாட்டின் நலன் கருதி மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ்

பட்டுக்கோட்டை: நாட்டின் நலன் கருதி பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.

பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியது:

வரவிருக்கும் தேர்தல் நாடு எத்தகைய அரசியல் பாதையில் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் ஆகும். தேசத்தின் பாதுகாப்புக் கருதி பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். 

இந்தியாவிலேயே அதிக வரி செலுத்தும் மாநிலம் தமிழ்நாடு. அப்படி இருக்கையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா. நிவாரண உதவிகள் செய்திருக்க வேண்டாமா. அதானி, அம்பானிகளுக்கு பணத்தை வாரி இறைக்கும் மோடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் எதுவும் செய்யவில்லை.  

 இன்றைக்கு அமைச்சர்களிடம் கோடிக்கணக்கில் பணம் புரள்வதால் வாக்குகளை விலை பேசுகின்றனர். தேர்தலில் மதம், ஜாதியை முன்னிறுத்துகின்றனர். 

இதை பொதுமக்கள் புரிந்து கொண்டு நாட்டை  காப்பாற்ற மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். 

 தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com