தஞ்சாவூரில் திண்டுக்கல் லியோனி பிரசாரம்

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் மக்களவைத் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் மக்களவைத் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகத்துக்கு ஆதரவாக திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவைத் துணைத் தலைவரும், பட்டிமன்றப் பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி திங்கள்கிழமை பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசுகையில், அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளன. இதில் இருப்பவர்கள் பேசும்போது தொடர்ச்சியாக தவறாகப் பேசி வருகின்றனர். தோல்வி பயம் காரணமாகவே அவ்வாறு பேசுகின்றனர்.
நான் வெற்றி பெற்றால் ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரவு வைப்பேன் என மோடி கூறினார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும், விவசாயிகளின் விளைபொருளுக்கு இரு மடங்கு லாபம் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறியவர் மோடி. இதில், எதையுமே மோடி செய்யவில்லை.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய போலீசார் தற்கொலை செய்து கொள்கின்றனர். கார்ட்டூன் வரைபவர், கிராமியப் பாட்டு பாடுபவர்கள் மீது தமிழக அரசுக் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தைப் பாய்ச்சுகிறது. ஆனால், நீதிபதிகளையும், போலீசாரையும் அவதூறாக பேசிய எச். ராஜா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரசாரம் செய்து வருகிறார்.
தமிழகத்திலும், இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட திமுக கூட்டணி கட்சிகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் லியோனி. பின்னர், இவர் மாதாகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com