திருவையாறு கோயில் விழாவில் தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலையில் புறப்பாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மரகத லிங்கத்துக்கு பால், தேன், மஞ்சள், சந்தனம், பழம் போன்ற திரவிய பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்குச் சென்று சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை ஐயாறப்பர் அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோ ரதத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், ஏப். 18-ம் தேதி திருத்தேரோட்டமும், 21-ம் தேதி சப்தஸ்தானம் என்கிற ஏழூர் வலம் வரும் நிகழ்ச்சியும், 22-ம் தேதி பொம்மை பூ போடும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com