சுடச்சுட

  


  பட்டுக்கோட்டையில் கட்சியினர் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
  பட்டுக்கோட்டை பெரியார் சிலை அருகில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். எஸ். பழனிமாணிக்கத்தை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்றது. 
  இதில் பங்கேற்று நடிகர் வாகை சந்திரசேகர் பேசுகையில், 22 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்  என்றார். 
  ஊடகவியலாளர் க.அய்யனாதன் பேசுகையில்,  மோடி ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். சிறு,குறு தொழில்கள் அழிக்கப்பட்டன. எனவே, மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்றார்.  
   முன்னதாக, மணிக்கூண்டில் தொடங்கி, பேருந்து நிலையம் பெரியார் சிலை வரை நடைபெற்ற பிரசார ஊர்வலத்துக்கு திமுக நகரப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார் தலைமை வகித்தார்.  மாவட்ட துணைச் செயலர் கா. அண்ணாதுரை, ஒன்றியச் செயலர்கள் என்.பி. பார்த்திபன், பா.ராமநாதன் முன்னிலை வகித்தனர். மாநிலப் பேச்சாளர் ந.மணிமுத்து, நகர காங்கிஸ் தலைவர் ஆர்.டி.ரவிக்குமார், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி. பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் எஸ்.கந்தசாமி,  தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  செயலர் சி.என். சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
  வெற்றிலை - பாக்கு வைத்து தமாகா வாக்கு சேகரிப்பு:  பட்டுக்கோட்டை பெரியகடைவீதி, விஎன்எஸ் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தமாகா விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் தமாகா விவசாய அணி மாவட்டத் தலைவர்கள் தஞ்சை வடக்கு ஆலமன்குறிச்சி  த. குமார், அரியலூர் மாவட்டத் தலைவர் வேதநாயகம், திருமானூர் கார்த்தி பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் அலெக்ஸ் உள்ளிட்ட தமாகா நிர்வாகிகள் கடை, கடையாகச் சென்று வெற்றிலை - பாக்கு வைத்து வணிகர்கள்,  பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். 
  அதிமுக தலைமையிலான கூட்டணியில் தஞ்சை மக்களவைத் தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிடும் என்.ஆர்.நடராஜனை ஆதரித்து ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அப்போது கோரிக்கை விடுத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai