சுடச்சுட

  


  பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் தஞ்சை மக்களவைத் தொகுதி  திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தை ஆதரித்து திங்கள்கிழமை இரவு   பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
  இதில், மூவேந்தர்  முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் பேசுகையில்,  நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 22 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள் வந்ததும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகவும் பதவியேற்பர் என்றார்.
  மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். திமுக நகரப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.என். செந்தில்குமார் முன்னிலை  வகித்தார். மாநிலப் பேச்சாளர்  ந.மணிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி. பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றியச் செயலர் எஸ்.கந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலர் சி.என். சக்கரவர்த்தி உள்பட பலர் கூட்டத்தில் கலந்து  கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai