Enable Javscript for better performance
மங்கனூர் திருவிழாவுக்குஏப். 22 முதல் 24 வரை சிறப்புப் பேருந்துகள்- Dinamani

சுடச்சுட

    

    மங்கனூர் திருவிழாவுக்குஏப். 22 முதல் 24 வரை சிறப்புப் பேருந்துகள்

    By DIN  |   Published on : 17th April 2019 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழாவுக்காக ஏப். 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
    இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
    மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா ஏப். 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறவுளளது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) ஏப். 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மங்கனூருக்கு விழாப் பேருந்துகளை இரவு, பகல் முழுவதும் இயக்கவுள்ளது. இப்பேருந்துகள் தஞ்சாவூர் - மங்கனூர், திருச்சி - மங்கனூர், திருக்காட்டுப்பள்ளி - மங்கனூர், கந்தர்வகோட்டை - மங்கனூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai