மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல வேன்கள் தயார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல வேன்கள் தயார் நிலையில் உள்ளன.


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல வேன்கள் தயார் நிலையில் உள்ளன.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,691 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன. இதேபோல,  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் 878 வாக்குச் சாவடிகள் உள்ளன.
இந்த வாக்குச் சாவடிக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்ல மாவட்டத்தில் உள்ள 200-க்கும் அதிகமான தனியார் வேன்கள் தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து ஒவ்வொரு வாகனத்திலும் போலீஸாரும், வாக்குச் சாவடி பணியாளர்களும் சென்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்கின்றனர். புதன்கிழமை (ஏப்.17) மாலைக்குள் வாக்குச் சாவடி மையங்களுக்குப் பணியாளர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் சென்று விடுவர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இந்தத் தேர்தல் பணிக்கு சுமார் 11,000 அரசு அலுவலர்கள், ஆசிரியர்களும், ஏறத்தாழ 2,000 போலீஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்கப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com