நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணெய்த் தாழி உற்சவம்
By DIN | Published On : 21st April 2019 03:56 AM | Last Updated : 21st April 2019 03:56 AM | அ+அ அ- |

ராமநவமி பிரமோத்ஸவத்தையொட்டி, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணெய்த் தாழி உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ராமநவமி பிரமோத்ஸவம் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கும், பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டு சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை வெண்ணெய்த் தாழி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, நவநீத சேவையில் ராமர் வெண்ணெய்த் தாழி பல்லக்கில் எழுந்தருளினார்.