பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோயிலில் சந்தனக் காப்பு விழா
By DIN | Published On : 21st April 2019 03:54 AM | Last Updated : 21st April 2019 03:54 AM | அ+அ அ- |

பாபநாசம் அருள்மிகு தங்கமுத்து மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை மாலை சந்தனக்காப்பு விழா நடைபெற்றது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் குடமுருட்டி ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.