திருவோணம் அருகே மூதாட்டி மர்ம சாவு
By DIN | Published On : 23rd April 2019 08:57 AM | Last Updated : 23rd April 2019 08:57 AM | அ+அ அ- |

திருவோணம் அருகே தலை நசுங்கிய நிலையில் மூதாட்டி இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவோணம் அருகே உள்ள வேப்பங்காடு உக்கடையை சேர்ந்தவர் திருமேனி. இவரது மனைவி சிந்தாமணி (75). திருமேனி ஏற்கெனவே இறந்துவிட்டார். இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்த சிந்தாமணி ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது வீட்டின் அருகே ஒரு தென்னை மரத்தின் அடியில் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
மர்மநபர்கள் யாரும் இவரை தலையில் அடித்து கொலை செய்தனரா அல்லது அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து திருவோணம் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.