முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி
By DIN | Published On : 04th August 2019 03:33 AM | Last Updated : 04th August 2019 03:33 AM | அ+அ அ- |

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர் மா. இராமகிருஷ்ணன் வழிகாட்டுதல்படி பத்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆங்கிலப் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்கள் சார்ந்த 2 நாள் கருத்தாக்கப் பயிற்சி தஞ்சாவூர் கமலா சுப்ரமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
தஞ்சை கல்வி மாவட்ட அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த பத்தாம் வகுப்பில் பாடம் கற்பிக்கும் 70 ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.
பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். பயிற்சியை உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சா. இளங்கோவன் பார்வையிட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். காசநாடு புதூர் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை அமுதா மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் தஞ்சை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ. மாடசாமி ஆகியோர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.