முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
தண்டவாளத்தில் இரும்புக் கொக்கி திருடியவர் கைது
By DIN | Published On : 04th August 2019 03:34 AM | Last Updated : 04th August 2019 03:34 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்புக் கொக்கிகளைத் திருடிய இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் சனிக்கிழமை அதிகாலை ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, ஆலக்குடி - பூதலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் இரும்புக் கொக்கிகளை இளைஞர் திருடிக் கொண்டு தப்பியோட முயன்றார். அவரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரட்டிச் சென்று பிடித்தனர்.
விசாரணையில் அவர் தஞ்சாவூர் செவ்வப்பநாயக்கன் வாரியைச் சேர்ந்த கே. மணி (24 ) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்து இரும்புக் கொக்கிகளைப் பறிமுதல் செய்தனர்.