முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பட்டுக்கோட்டையில் விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 04th August 2019 03:31 AM | Last Updated : 04th August 2019 03:31 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை நகர காவல் நிலையம் மற்றும் நகரிலுள்ள மனோரா ரோட்டரி சங்கம், பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம், மிட்டவுன் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து பேரணியை நடத்தின.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணியை ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் வழக்குரைஞர் ஆர். ஜெயவீரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
பட்டுக்கோட்டை டிஎஸ்பி எஸ்.கணேசமூர்த்தி, காவல் ஆய்வாளர் ஜெயமோகன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா, உதவி ஆய்வாளர்கள் தென்னரசு, வீரையன் மற்றும் அனைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 300 பேர் பங்கேற்றனர்.
போக்சோவில் சிக்கினால் தூக்குத் தண்டனை, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண்களையும், குழந்தைகளையும் மதிப்போம், குழந்தைகளை ஆபாச படம் எடுக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மாணவிகள் ஏந்திச் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது.