ஆகஸ்ட் 15 கிராம சபைக் கூட்டத்தில் ஆகஸ்ட் 15 கிராம சபைக் கூட்டத்தில்

சுதந்திர தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உல்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஆக. 15-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற


சுதந்திர தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உல்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஆக. 15-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காவிரிப் படுகை பாதுகாப்புக் கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இக்கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஆற்றுப் படுகை, விவசாய நிலங்களில் மணல் மாஃபியாக்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதால், விவசாயம், குடிதண்ணீர் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஆக. 15-ம் தேதிக்கு பிறகு டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து பேசி, அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கோ. திருநாவுக்கரசு தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலச் செயலர் சாமி. நடராஜன், மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாவட்ட நிர்வாகிகள் வீரமோகன், கல்யாணசுந்தரம், பாஸ்கர், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், ஜனநாயக விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் இரா. அருணாசலம், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு. பழனிராசன், தமிழக விவசாயிகள் சங்கம் கக்கரை ஆர். சுகுமாரன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலர் அருண்சோரி, திமுக விவசாய அணி நேதாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com