ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: மின் ஊழியர் மத்திய  அமைப்பு கோரிக்கை

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என  தஞ்சாவூர் மின் வட்ட கிளையின் 19 வது வட்டப் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என  தஞ்சாவூர் மின் வட்ட கிளையின் 19 வது வட்டப் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அய்யம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டத் தலைவர் ஏ. அதிதூத மைக்கேல் ராஜ் தலைமை வகித்தார். வட்ட துணைத் தலைவர் எஸ். ராஜாராமன் சங்கக் கொடியேற்றினார். வட்டச் செயலர் காணிக்கைராஜ் அறிக்கை வாசித்தார். வட்ட பொருளாளர் எம். ஆரோக்யசாமி வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகளில் தலைவராக ஏ. அதிதூத மைக்கேல்ராஜ், செயலராக காணிக்கைராஜ், பொருளாளராக ஆரோக்யசாமி,கௌரவத் தலைவராக து. கோவிந்தராஜூ மற்றும் துணைத் தலைவர்கள்,துணைச் செயலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 
கூட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் து. கோவிந்தராஜு, மாநில துணைத் தலைவர்கள் எஸ். ரெங்கராஜன்,அகஸ்டின், மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்புச் செயலர் முனியாண்டி,பொருளாளர் கணேசன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மாவட்டத் துணைச் செயலர் செங்குட்டுவன்,விவசாய தொழிலாளர் சங்கம் உமாபதி உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் மின்வாரியங்களை தனியார்மயமாக்கும் சட்டங்களைக் கைவிட வேண்டும், மின் விநியோகத்தில் தனியார்மயத்தைக் கைவிட வேண்டும், மின் ஊழியர்களின் 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும், மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களைக் அடையாளம் கண்டு தினக்கூலி வழங்க வேண்டும்,அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கும்பகோணம் கோட்டச் செயலர் யு. ஷேக் அகம்மது உஸ்மான் உசேன் வரவேற்றார். கோட்ட செயலர் பி. ரமேஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com