சுடச்சுட

  

  ஒரத்தநாடு  அருகே உள்ள சேதுராயன் குடிக்காடு மேல தெருவைச் சேர்ந்தவர் சித்தார்த்தன் (60).  இவர் திங்கள்கிழமை  ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு தேத்தாவடி கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். 
  செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை அவரது வீடு திறக்கப்படாத நிலையில், அவர் வீட்டில் உள்ள ஆடு, மாடுகள் தண்ணீரின்றி கத்தியதால், அந்த வழியாக வந்த கிராம மக்கள் அவரது வீட்டைத் திறந்து பார்த்தபோது சித்தார்த்தன் இறந்து கிடந்தாராம். இறுதி சடங்குக்காக சித்தார்த்தின் உடலை குளிப்பாட்ட உறவினர்கள் முயன்றபோது,  அவரது மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டிருந்ததாம்.  இதுகுறித்த தகவலின்பேரில், ஒரத்தநாடு டிஎஸ்பி காமராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன சித்தார்த்துக்கு  மாலதி (50) என்ற மனைவியும், விவேக், மதன் என்ற இரு மகன்களும் உள்ளனர். இவர்களில் மாலதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. மகன்கள் சென்னையில் வேலை செய்து வருவதாக தெரிகிறது. 
  சித்தார்த் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai