சுடச்சுட

  

  சிலை கடத்தல் வழக்கு: கைதான பெண் கும்பகோணத்தில் நீதிபதி முன் ஆஜர்

  By DIN  |   Published on : 14th August 2019 10:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிலை கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட பெண் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி முன் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். 
  புதுச்சேரி மாநிலம் கோலாக் நகரைச் சேர்ந்தவர் மரிய தெரசா ஆனந்தி வனினா (37). இவர் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். மேலும், அவர் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமைப் பெற்றவர்.
  இந்நிலையில், ஆனந்தி வனினாவுக்கு பஞ்சலோக சிலைகளைக் கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பதில் தொடர்பு இருப்பதாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தெரியவந்தது. 
  இதையடுத்து புதுச்சேரியில் உள்ள ஆனந்தி வனினாவின் வீட்டில் போலீஸார் 2016 ஆம் ஆண்டில் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் 11 புராதன பஞ்சலோக சிலைகளைக் கடத்தி விற்பதற்காக  மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
  இதையடுத்து போலீஸார் ஆனந்தி வனினாவை கைது செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவர் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுவிட்டார். 
  இதைத் தொடர்ந்து போலீஸார் ஆனந்தி வனினாவை தேடப்படும் சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். 
  இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த ஆனந்தி வனினாவை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். 
  இதையடுத்து, கும்பகோணத்தில்  உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி வீட்டில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இவரை ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஆனந்தி வனினா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai