சுடச்சுட

  

  நெல்லுக்குக் கூடுதல் விலை கோரி கும்பகோணம் நீதிமன்றச் சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் நெல் மணிகளைக் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  சம்பா, தாளடி பருவ நெல்லுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகை, இடைநிகழ் செலவு தொகை, சம்பா சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைத் தமிழக அரசு அறிவிக்கக் கோரியும், மத்திய அரசு கடந்த 2019 - 20 ஆம் ஆண்டுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 65 விலையை அறிவித்து விவசாயிகளை வஞ்சித்ததைக் கண்டித்தும், குறுவை, சம்பா சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை இணைத்து சம்பா, தாளடிக்கு ரூ. 550 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது. சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வைக்கோல் கட்டுடன் நெல் மணிகளைக் கொட்டி முழக்கங்கள் எழுப்பினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai