சுடச்சுட

  

  பாபநாசம் கட்டுமான தொழிலாளர் சங்க அலுவலக வளாகத்தில் தஞ்சாவூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம், பாபநாசம் வட்டார ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் உ. சௌந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட உதவி செயலாளர் சீ. சுகுமாரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் கலந்து கொண்டு, நலவாரிய செயல்பாடுகள் ஏ.ஐ.டி.யூ.சி. முடிவுகள் பற்றி விளக்கி பேசினார்.
   கூட்டத்தில், கட்டுமானப் பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மணல் கிடைக்க தமிழக அரசை வலியுறுத்தி 01.09.2019 அன்று காலை பாபநாசம் அண்ணா சிலை அருகில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது, அரசு போக்குவரத்து கழகத்தில் பிரீமியம் சர்வீஸ் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதை குறைக்க வேண்டும், சாதாரண கட்டண பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என குடந்தை கோட்ட நிர்வகத்தை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   இதில், 108 சிவாலயம் எல். மாரிமுத்து, வங்காரம்பேட்டை ஏ.செல்வம், பி. மணிகண்டன், திருப்பாலைத்துறை டி.வேணுகோபால், கபிஸ்தலம் டி. ராமஜெயம், ஆர்.சாமிநாதன், பாபநாசம் எஸ். கலியமூர்த்தி, ஆர். நௌசாத் அலி, ஆர்.விஜயன், ஆர். சதீஷ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவில் பாபநாசம் ஜே. பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai