சுடச்சுட

  

  தேசிய மருத்துவ ஆணையத்தை ரத்து செய்ய கோரி மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்  

  By DIN  |   Published on : 15th August 2019 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய மருத்துவ ஆணையத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தம் மற்றும் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   இந்திய மருத்துவக் கழகம் என்ற தன்னாட்சி அமைப்பை மாற்றி, தேசிய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசுக் கொண்டு வந்துள்ளது. இந்த ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மூலம், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்குப் பல பாதகங்கள் உள்ளன.
   எனவே, தேசிய மருத்துவ ஆணையத்தைத் திரும்பப் பெறக் கோரியும், பழைய படி இந்திய மருத்துவக் கழகத்தைக் கொண்டு வர வலியுறுத்தியும் மருத்துவர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் புதன்கிழமை பணியைப் புறக்கணித்துவிட்டு, தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய மருத்துவ ஆணையத்தை மத்திய அரசுத் திரும்பப் பெற தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
   தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க மாநிலச் செயலர் அருணந்தி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai