சுடச்சுட

  

  பட்டுக்கோட்டையை அடுத்த புனல்வாசல் கிராமத்தில் நுகர்வோர் குழுக் கூட்டம் அதன் தலைவர் வி.ஏ. சவரிமுத்து தலைமையிலும், செயலாளர்கள் ஆர்.ஏ. செபஸ்தியார், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கல்லணைக் கால்வாய் ஈச்சன்விடுதில் 500 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும். செருவை அருகிலுள்ள நவக்குழி ரெகுலேட்டரில் கடைமடைப் பாசனப் பகுதிகளான சேதுபாவாசத்திரம் மற்றும் புதுப்பட்டினம் தாய்வாய்க்கால்களில் உள்முறை வைப்பதை தவிர்த்து, தொடர்ந்து முழு அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும். கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைந்து அங்குள்ள ஏரி, குளங்கள் நிரம்பிய பின்னரே மதகு ஷட்டர்களை திறக்க வேண்டும். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பயிர்க் கடன்களை தாமதமின்றி வழங்க ஆட்சியர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள
   விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   நுகர்வோர் குழு உறுப்பினர்கள் கோகிலா ஜெயம், ரோணிக்கை மேரி, ஜுலியா, ஜோதி, ஆர்.கருப்பையன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆசிரியர் (ஓய்வு) ஏ. ஆரோக்கியம் நன்றி கூறினார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai