ஊரணிபுரம் அருகே உயர்நிலை பாலம் திறப்பு: காணொலியில் முதல்வர் திறந்துவைத்தார்

ஒரத்தநாடு வட்டம், ஊரணிபுரம் அருகே வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் ரூ 2.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்நிலை பாலத்தை புதன்கிழமை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து

ஒரத்தநாடு வட்டம், ஊரணிபுரம் அருகே வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் ரூ 2.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்நிலை பாலத்தை புதன்கிழமை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
 தமிழக அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், திருக்காட்டுப்பள்ளி - பட்டுக்கோட்டை சாலையில் பிரிந்து, கல்விராஜன்விடுதி செல்லும் சாலையில், நரியாற்றின் குறுக்கே, 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்நிலை கட்டப்பட்டது. இந்தப் பாலத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி புதன்கிழமை திறந்துவைத்தார். இதை தொடர்ந்து, வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் புதிய பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு தலைமை வகித்தார். அதிமுக ஒன்றியச்செயலாளர்கள் (கறம்பக்குடி) சரவணன், (பேராவூரணி) உ.துரைமாணிக்கம், (திருவோணம்) சத்தியமூர்த்தி, பாசறை மாவட்டச்செயலாளர் பி.கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் புதுக்கோட்டை கோட்டப் பொறியாளர் ஆர். புகழேந்தி, உதவிக் கோட்டப் பொறியாளர் ஆண்ட்ரூஸ், உதவிப் பொறியாளர் ராஜதுரை மற்றும் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com