காவிரியில் உபரி நீர் வரத்து: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் 

மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார்.

மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார்.
 இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: கர்நாடகம், கேரளத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் அதிக அளவு வெள்ள நீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் வருகிறது.
 மேட்டூர் அணை நிரம்பி வரும் நிலையில், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்துவிட வாய்ப்பு உள்ளது.
 மாவட்டத்தில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் இரவு நேரத்தில் ஆற்றில் இறங்குவதையும், பயன்படுத்துவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 காவிரி நீர் பாய்ந்து வரும் கால்வாய்கள், ஆறுகள், நீர்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ, இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம்.
 தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள இடங்களிலும், அபாயகரமான இடங்களிலும் நீர்ச்சுழல் ஏறபடக்கூடிய இடங்களிலும் பொதுமக்கள் யாரும் சுயபடம் (செல்பி) எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 கால்வாய்கள், ஆறுகள், நீர்நிலைகளில் நீர் அதிகம் திறந்துவிட வாய்ப்பு உள்ளதால், அந்தப் பகுதிகளுக்குக் குழந்தைகள் விளையாடச் செல்லாமல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
 விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர் நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com