Enable Javscript for better performance
பாரிவேந்தர் பிறந்தநாள்; விவசாயிகளுக்கு உதவி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் அருகே இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தரின் பிறந்த நாளையொட்டி, விவசாயிகள், மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.  பின்னர், தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை கிராமத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை மாநில போராட்டக் குழுத் தலைவரும், மேற்கு மாவட்டத் தலைவருமான ச. சிமியோன் சேவியர்ராஜ் ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும், அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டது. 
    இதையடுத்து, விவசாயிகளுக்கு மண்வெட்டி, கதிர் அரிவாள், மா, பலா, கொய்யா போன்ற மரகன்றுகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் கே. வினோபா, மாவட்டப் பொருளாளர் முத்துகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் கணேசன், மாவட்ட மகளிர் அணி செயலர் சீதாலட்சுமி, மாவட்ட இளைஞரணி செயலர் சித்திரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai