Enable Javscript for better performance
ஹெலிகேம் மூலம் பெரியகோயிலை படம் பிடித்தது குறித்து புகார்- Dinamani

சுடச்சுட

    

    ஹெலிகேம் மூலம் பெரியகோயிலை படம் பிடித்தது குறித்து புகார்

    By DIN  |   Published on : 24th August 2019 10:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் பெரியகோயிலை ஹெலிகேம் மூலம் மர்ம நபர்கள் படம் பிடித்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.
    இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் இந்திய தொல்லியல் துறை நினைவு சின்ன உதவியாளர் நடராஜன் வியாழக்கிழமை அளித்த புகார் மனு:
    தஞ்சாவூர் பெரியகோயிலில் நானும், சக ஊழியர் விஜயகுமாரும் ஜூலை 31-ஆம் தேதி பணியில் இருந்தோம். அப்போது, பகல் 11 மணியளவில் ஒரு ஹெலிகேம் கேமராவில் படம் எடுத்துக் கொண்டு பறந்து வந்தது. நானும், விஜயகுமாரும் அதைப் பின் தொடர்ந்து சென்றபோது நுழைவுவாயில் கிழக்குப் பகுதியிலிருந்து புறப்பட்டு, நான்கு புறமும் சுற்றிப் படம் எடுத்துக் கொண்டு தெற்கு திசையில் மறைந்துவிட்டது. 
    இதையடுத்து அந்தத் திசையை நோக்கி ஓடிப் போய்ப் பார்த்தோம். அதை இயக்கியவர் யார் எனத் தெரியவில்லை. இந்தியத் தொல்லியல் துறையின் உரிமமோ, முன் அனுமதியோ இன்றி, பெரியகோயிலின் அனைத்துப் பகுதிகளையும் படமெடுத்துச் சென்ற நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதன்பேரில் போலீஸார் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai