நூறு நாள் வேலையை  200 நாள்களாக்க கோரிக்கை

நூறு நாள் வேலையை 200 நாள்களாக உயர்த்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நூறு நாள் வேலையை 200 நாள்களாக உயர்த்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் இச்சங்கத்தின் கும்பகோணம் மண்டல கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சீர்குலைத்து, அதை முற்றிலும் கைவிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்வதைக் கண்டிப்பது,  வேலை உறுதித் திட்ட வேலை நாட்கள் 100 என்பதை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். கிராமம் சார்ந்த நகர்ப்புறங்களிலும், பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பயன்படும் வகையில் வேளாண் துறையிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
நாகை அவுரித் திடலில் செப். 5-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலை உறுதிச் சட்டப் பாதுகாப்பு மாநாட்டில் திருவிடைமருதூர், திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம் ஆகிய ஒன்றியங்களில் இருந்து ஆயிரம் பேர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஏ. குருசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி. பக்கிரிசாமி, துணைச் செயலர் க. கண்ணகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com