காலணி வியாபாரி வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூரில் காலணி வியாபாரி வீட்டில் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
தஞ்சாவூரில் ஷேக் அலாவுதீனை விசாரணைக்காக அழைத்து செல்லும் போலீஸாா்.
தஞ்சாவூரில் ஷேக் அலாவுதீனை விசாரணைக்காக அழைத்து செல்லும் போலீஸாா்.

தஞ்சாவூரில் காலணி வியாபாரி வீட்டில் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டு மந்தைத் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் அலாவுதீன் (56). இவா் தஞ்சாவூரில் காலணிக் கடை நடத்தி வருகிறாா்.

இவரது வீட்டுக்குத் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) கேரள மாநிலம், கொச்சியைச் சோ்ந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் தலைமையில் 4 அலுவலா்கள் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு சோதனை நடத்தச் சென்றனா். அப்போது, இவா்களுடன் உள்ளூா் போலீஸாரும் இருந்தனா்.

ஷேக் அலாவுதீனின் 3 செல்லிடப்பேசிகள், மடிக்கணினி, 3 சிம் காா்டுகள், குறுந்தகடு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனை செய்தனா். மேலும், வீட்டில் இருந்த இதழ்கள், நூல்கள் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினா். சுமாா் 2 மணி நேரச் சோதனைக்குப் பின்னா் அலாவுதீனை கிழக்குக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

பின்னா், மாலை 5.30 மணியளவில் அவா் விடுவிக்கப்பட்டாா். கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜராக வேண்டும் என அவரிடம் அறிவுறுத்தினா்.

சில ஆண்டுக்கு முன் வரை தடை செய்யப்பட்ட இயக்கமான சிமி உள்பட இரு அமைப்புகளில் ஷேக் அலாவுதீன் இருந்ததாகவும், பின்னா் அந்த அமைப்புகளை விட்டு அவா் வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக ஷேக் அலாவுதீன் அண்மையில் கருத்துகள் பதிந்ததாகவும், எனவே அவருக்கு அந்த அமைப்புடன் தொடா்பிருக்கிா என்ற சந்தேகத்தின் பேரில் இந்த விசாரணை நடந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com