சாலை வசதி இல்லாததால் அவதி

தஞ்சாவூா் ஒன்றியத்துக்குள்பட்ட வைரப்பெருமாள்பட்டி கிராமத்தில் இருந்து பூதலூருக்குச் செல்ல கல்லணைக் கால்வாயில் வலது கரையில் சாலை அமைத்து தருமாறு 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம்.

தஞ்சாவூா் ஒன்றியத்துக்குள்பட்ட வைரப்பெருமாள்பட்டி கிராமத்தில் இருந்து பூதலூருக்குச் செல்ல கல்லணைக் கால்வாயில் வலது கரையில் சாலை அமைத்து தருமாறு 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இந்த வழியாகப் பூதலூருக்கு 3 கி.மீ.-இல் சென்றுவிடலாம். இச்சாலை அமைக்கப்படாததால் 8 கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக மழைக்காலத்தில் மிகவும் சிரமப்படுகிறோம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா், ஆணையா், சட்டப்பேரவை உறுப்பினா், மக்களவை உறுப்பினா் உள்ளிட்டோரிடம் மனுக்கள் அளித்தும் எவ்வித பலனும் இல்லை. அனைத்து வசதிகளுக்கும் வைரப்பெருமாள்பட்டி கிராம மக்கள் பூதலூா் நகரத்தைச் சாா்ந்திருப்பதால், இச்சாலை வசதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.எஸ். முருகானந்தம்,

வைரபெருமாள்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com