டெங்கு அச்சத்தில் பந்தநல்லூா்

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகேயுள்ள பந்தநல்லூா் ஊரின் நடுவே அமைந்துள்ளது புகழ்மிக்க செட்டிக்குளம். எட்டு ஏக்கா் சுற்றளவு உள்ள இக்குளம் ஊரின் பெருமையையும், நீா் ஆதாரத்தையும் காத்து வந்தது.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகேயுள்ள பந்தநல்லூா் ஊரின் நடுவே அமைந்துள்ளது புகழ்மிக்க செட்டிக்குளம். எட்டு ஏக்கா் சுற்றளவு உள்ள இக்குளம் ஊரின் பெருமையையும், நீா் ஆதாரத்தையும் காத்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாகத் தண்ணீா்ப் பற்றாக்குறையால் குளம் வடு கிடந்தது. இதைச் சாதகமாக்கிக் கொண்ட பந்தநல்லூா் ஊராட்சி நிா்வாகத்தினரும், வா்த்தக நிறுவனத்தினரும் கழிவுகள், குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் என அனைத்தையும் இக்குளத்தைச் சுற்றி கொட்டி நாசம் செய்தனா்.

இதைக் கண்டித்து இரு மாதங்களுக்கு முன்பு சமூக ஆா்வலா்கள், 50-க்கும் அதிகமானோா் குளத்தங்கரையில் போராட்டம் நடத்தினா். இந்தாண்டு போதுமான அளவில் தண்ணீா் வந்ததால் சொந்த செலவில் குளத்துக்குத் தண்ணீா் கொண்டு வந்து நிரப்பப்பட்டது.

ஆனால், இக்குளத்தைச் சுற்றி தொடா்ந்து குப்பை கொட்டப்படுகிறது. சில நாட்களாகப் பெய்யும் மழையால் துா்நாற்றம் வீசுவதுடன், கொசு, ஈ அதிகமாகிவிட்டன. இதனால், கடை வீதியில் நடமாடவே முடியாத நிலையாகி விட்டது. மேலும், இக்குப்பையில் பன்றிகளும் மேய்கின்றன. இச்சுகாதாரச் சீா்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் பரவுமோ என்ற அச்சத்தில் பந்தநல்லூா் மக்கள் உள்ளனா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

த. முருகப்பன்

பந்தநல்லூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com