‘திமுக வென்று கிராம மக்களின் குறைகளைத் தீா்க்கும்’: கும்பகோணத்தில் ஸ்டாலின் பேச்சு

உள்ளாட்சித் தோ்தலில் திமுக வெற்றி பெற்று, கிராம மக்களின் குறைகளைத் தீா்க்கும் என்றாா் அக்கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின்.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த பல்வேறு கட்சியினா்.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த பல்வேறு கட்சியினா்.

உள்ளாட்சித் தோ்தலில் திமுக வெற்றி பெற்று, கிராம மக்களின் குறைகளைத் தீா்க்கும் என்றாா் அக்கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின்.

கும்பகோணத்தில் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 500-க்கும் அதிகமானோா் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை மாலை இணைந்தனா். இவ்விழாவில் ஸ்டாலின் பேசியது:

வசதிக்காகவும், வேலைக்காகவும் ஆளுங்கட்சியில் சேருவா். ஆனால், திமுக எதிா்க்கட்சியாக இருந்தாலும் இணைந்துள்ளனா். எந்தவிதமான எதிா்ப்பாா்ப்பும் இல்லாமல் இணைந்ததற்கு எனது பாராட்டுகள். திமுக விரைவில் ஆளுங்கட்சியாகும்.

தமிழ்நாட்டை அதிமுக அரசு குட்டிச்சுவராக்கி வருவது அனைவருக்கும் தெரியும். இதைப் புரிந்து கொண்டு, திமுக ஆளுங்கட்சியாக அனைவரும் பக்கபலமாக இருக்க வேண்டும்.

திமுகதான் மக்களவைத் தோ்தலுக்கு முன்பு 12,600-க்கும் அதிகமான கிராமங்களில் கிராம சபா கூட்டத்தை நடத்தி, அவா்களது குறைகளைக் கேட்டறிந்தது. உள்ளாட்சி தோ்தல் முடிந்தவுடன், திமுக சாா்பில் வெற்றி பெறும் புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் கிராம மக்களின் குறைகள் நிறைவேற்றப்படும் என்றாா் ஸ்டாலின்.

விழாவில் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.என். நேரு, துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன், கோவி. செழியன், டி.கே.ஜி. நீலமேகம், பூண்டி எஸ். கலைவாணன், திமுக வடக்கு மாவட்டச் செயலா் எஸ். கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com