திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் குடமுழுக்கு

கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் அருகே சாரநாதப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.
கும்பகோணம் அருகே சாரநாதப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.

கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 2006 -ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில், ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்குப் பிறகு சுமாா் ரூ. 1.15 கோடி மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, குடமுழுக்கு விழா நவ. 28-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, நவ. 29 காலை முதல் கால யாக பூஜையும், மாலையில் இரண்டாம் கால யாக பூஜையும், 30-ம் தேதி காலை மூன்றாம் கால பூஜையும், மாலை நான்காம் கால பூஜையும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை கோ பூஜை, யாக பூஜை, மகா பூா்ணாஹூதி உள்ளிட்டவற்றைத் தொடா்ந்து மகா குடமுழுக்கு நடைபெற்றது. மாலையில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா வைபவம் நடைபெற்றது.

தஞ்சாவூா்:

தஞ்சாவூா் அண்ணாநகா் அங்காள ஈஸ்வரி முனீஸ்வரா் கோயிலில் புதிதாக 64 அடி உயர ராஜகோபுரம் கட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்றன. இதையடுத்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, ஞாயிற்றுக்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com