Enable Javscript for better performance
அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில்பயிற்றுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்றுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 03rd December 2019 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூா் அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் இரு ஒப்பந்தப் பயிற்றுநா் பணியிடத்துக்கு டிச. 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து நிலைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தஞ்சாவூா் அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் மின்சாரப் பணியாளா் தொழிற் பிரிவில் காலியாக உள்ள இரு ஒப்பந்தப் பயிற்றுநா் பணியிடத்துக்கு டிச. 9-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மாதம் ரூ. 10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும். விண்ணப்பங்களை துணை இயக்குநா் - முதல்வா், அரசுத் தொழிற் பயிற்சி நிலையம், தஞ்சாவூா் 613 007 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ, நேரிலோ அனுப்ப வேண்டும்.

    குறிப்பிட்ட தேதிக்கு பின்பு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களும், சரிவர நிறைவு செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai